கொள்கையை மறந்தோம்; கொள்கை வாதிகள் தாமாகவே மறைந்தார்கள்!

1) ச்சே… பெரியார் மட்டும் இப்போது இருந்திருந்தால்….

2) கலைஞர் இன்றும் ஆரோக்கியமாக இருந்திருக்க வேண்டும்…

3) தோழர் ஜீவா இருந்திருக்க வேண்டிய காலம் இதுதான்…

4) அடுத்த தலைமுறை முஸ்லிம்களுக்கு ஒரு தலைமையை காயிதேமில்லத் அடையாளம் காட்டிச் சென்றிருந்தால்…

5) இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால்…

6) காமராஜரின் காலம் பொற்காலம்…

இப்படி எத்தனை எத்தனை போதாமைகள் நம்மிடம்.

ஆனால் அவர்களிடமோ, மூஞ்சே இல்லையே? கோல்வால்கர் மறைந்துவிட்டாரே, சாவர்கர் இறந்துவிட்டாரே என்று எந்த புலம்பலும் இல்லை. எனினும், 1925-ல் துவங்கிய கனவு இன்று உத்தரப்பிரதேசத்தில் வெள்ளோட்டம் பார்க்கப்படுகிறது.

தத்துவங்களை பேசுவது வேறு.
செயல்படுத்துவது வேறு.

கொள்கையை மறந்தோம்.
கொள்கைவாதிகள் தாமாகவே மறைந்தார்கள்.

FAROOQ MEERAN