தமிழகத்தில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப்படம் பார்த்த 3000 பேருக்கு விரைவில் சம்மன்!

உலகிலேயே இந்தியாவில் தான் அதிகமாக குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப்படங்கள் பார்க்கிறார்கள் என்கிற தகவலுடன், அவர்களின் பட்டியலை எஃப்.பி.ஐ இந்திய ஒன்றிய உள்துறைக்கு அனுப்பியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 5000 பேர் அந்த பட்டியலில் இருப்பதால், அது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தமிழக குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை ஒப்புக்கொண்ட கூடுதல் டிஜிபி ரவி விரைவில் நடவடிக்கை வரும் எனத் தெரிவித்திருந்தார்.

ஆபாசப்படம் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல, ஆனால் குழந்தைகளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆபாசப்படத்தை பார்ப்பது குற்றம். தற்போது வந்துள்ள பட்டியலானது, இந்தியாவில், தமிழகத்தில் இதுபோன்று குழந்தைகள் பயன்படுத்தப்பட்ட ஆபாசப்படத்தை பார்த்தவர்கள் பட்டியல் ஆகும்.

இந்த பட்டியலில் உள்ளவர்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்தத்தனிப்படை ஐபி அட்ரஸை வைத்து யார்யார் என்றென்று பார்த்தார்கள் என்பதை லிஸ்ட் எடுத்து விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளது. இதில் குழந்தைகளுக்கான ஆபாசப்படம் பார்த்தவர்கள், டவுன்லோடு செய்தவர்கள் ஆகியோர் சிக்குகிறார்கள்.

குழந்தைகள் என்றால் 18 வயதுக்கு கீழுள்ளவர்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆபாசப்படங்களை பார்ப்பதோ, அதை ஷேர் செய்வதோ, டவுன்லோட் செய்வதோ, அப்லோட் செய்வதோ சட்டப்படி குற்றம். அதற்கு போக்சோ சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை வரும். 3 முதல் 8 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்.

குழந்தைகள் நடிக்கும் ஆபாசப்படம் பார்ப்பது சட்டப்படி நடவடிக்கைக்குரியது. வந்தது பார்த்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. பார்த்தாலும் குற்றமே. ஐடி சட்டம் 67-ன்படி குற்றமே.

தற்போது இந்த விவகாரம் பரபரப்பாக உள்ள நிலையில் பலரும் ஒருவித பயத்தில் இருக்க காவல்துறையின் எச்சரிக்கையை தவறாக பயன்படுத்திக்கொண்டு, போலீஸார் பேசுவதுபோன்று தொடர்பு கொண்டு பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. பின்னணியில் வாக்கி டாக்கி ஒலியுடன் பேசும் நபர் போலீஸ்போல் மிரட்டி அப்பா நம்பரை கேட்கிறார். நாளை உன் அப்பா நம்பருக்கு போன் வரும் என மிரட்டுகிறார்.

இவ்வாறு மிரட்டுவது குறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, 3000 பேர் கொண்ட பட்டியலில் உள்ளவர்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, தகவல் அறிக்கை பதிவு செய்த பின்பு முறையாக அழைத்து விசாரிக்கப்படுவார்கள் என்றும், இதுபோன்று திடீரென செல்போனில் தொடர்பு கொண்டு காவலர்கள் விசாரிக்க மாட்டார்கள் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Read previous post:
0a1e
ஏற்கெனவே அறிவித்த தேதிகளில் 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட டிச.27 மற்றும் 30 தேதிகளிலேயே இரண்டு

Close