வாக்குப்பதிவு முடிந்தது: அரவக்குறிச்சி 81.92%, திருப்பரங்குன்றம் 70.19%, தஞ்சாவூர் 69.02%, நெல்லிக்குப்பம் 85.76%

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தின் 3 தொகுதிகளிலும் மொத்தம் 73.71% வாக்கு பதிவானது. அரவக்குறிச்சியில் மிக அதிகமாக 81.92% வாக்குகளும், அதனையடுத்து திருப்பரங்குன்றத்தில் 70.19% வாக்குகளும், தஞ்சாவூரில் 69.02%, வாக்குகளும் பதிவாகி உள்ளன.

புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதியில் 85.76% வாக்குகள் பதிவாகியுள்ளன. இத்தொகுதியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் வருகிற செவ்வாய்க்கிழமை (நவ.22ஆம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.