“ஜெ. மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்!” – சுப.உதயகுமாரன்

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், பச்சை தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமாரன் கூறியிருப்பதாவது:

தமிழக மக்களாகிய நாங்கள், முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் 75 நாட்களாக தனிமையில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததையும், மர்மமான முறையில் இறந்திருப்பதையும் மிகவும் சந்தேகிக்கிறோம்.

அப்பல்லோ மருத்துவமனை, மாநில அரசு அதிகாரிகள், எய்ம்ஸ் மருத்துவர்கள், சில மத்திய அமைச்சர்கள், திருமதி. சசிகலா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இந்த மர்ம மரணத்தில் சேர்ந்து இயங்கியிருக்கலாம் என்று அஞ்சுகிறோம்.

ஒரு மிக முக்கியமான குற்ற வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவரவிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றமோ அல்லது உச்சநீதிமன்றமோ தாமாகவே முன்வந்து இம்மரணம் குறித்து ஒரு விசாரணை நடத்த வேண்டும்.

இந்நடவடிக்கை இந்தியாவின் சனநாயகக் கட்டமைப்பை போற்றிப் பாதுகாப்பதற்கு மிகவும் இன்றியமையாதது.

We, the people of Tamil Nadu, are very suspicious about the 75-day solitary confinement and the mysterious death of former Chief Minister, Ms. J. Jayalalitha. The Apollo Hospital, state government officials, AIIMS hospital doctors, a few union government ministers, Ms. Sasikala and family may have worked hand in glove with each other in this mysterious death. It is also pertinent to note that the Supreme Court judgment is about to come in a very important criminal case. Given this situation, the Madras High Court or the Supreme Court should do suo moto inquiry into this controversial death matter. Such a step would be quite crucial to protect the democratic system in India.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.