கவுதமியை மோடிக்கு கடிதம் எழுத சொன்னதே மத்திய பாஜக அமைச்சர் ஒருவர் தான்!

ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலி அமைதியாக முடியும் வரை காத்திருந்த பா.ஜ.க, தற்போது, காயை நகர்த்த தொடங்கி உள்ளது. இதுவரையில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்த நடிகை கௌதமியை பிரதமருக்கு கடிதம் எழுத வைத்துள்ளனர். இந்த கடிதப் பின்னணியில் ஓர் அரசியலே ஒளிந்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர்.

தற்போது ஜெயலலிதாவின் மரண ரகசியம் தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் கௌதமி. ‘இந்தக் கடிதத்தை அவருக்கு எழுத சொன்னது மத்திய அமைச்சர் ஒருவர்தான்’ என்றும் சொல்கின்றனர்.

நேரிடையாக பிரதமரை சந்தித்து பேசும் நடிகை கௌதமி, கடிதம் எழுதி அதை பிரபலப்படுத்தியதற்கும் காரணம் இருக்கிறது. ஏனெனில், கடிதம் குறித்த தகவல்கள் பொது மக்கள் மத்தியிலும், அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கின்றனர்.

சொத்துக் குவிப்பு வழக்கு, கட்சிக்குள் பூசல் என இக்கட்டான இந்த நேரத்தில் வருமானவரி சோதனையும் சசிகலா நடராஜன் தரப்பை மிரட்டவே நடத்தப்பட்டுள்ளதாக உள்விவரங்கள் சொல்கின்றன.

அ.தி.மு.கவில் இருக்கும் ஒரு மூத்த அமைச்சர் மூலமாகவும், கடைசியாக பதவியேற்ற அமைச்சர் ஒருவர் மூலமாகவும், முன்னாள் அமைச்சர் ஒருவர் மூலமாகவும் அ.தி.மு.கவில் குழப்பத்தை ஏற்படுத்தும் திட்டமும் பா.ஜ.கவிடம் இருப்பதாகச் சொல்கின்றனர்.

மத்திய அரசுடன் நெருக்கமாக இருக்கும் அ.தி.மு.கவின் மூத்த நிர்வாகி ஒருவர் மூலமாகவும் கட்சியை பிளவுப்படுத்தும் சதி வேலைகள் நடத்தப்படுகிறதாம்.

இவ்வாறு ஒவ்வொரு திசையிலிருந்தும் அ.தி.மு.கவை பிளவுபடுத்த வீசப்படும் எதிர்ப்புகளை ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க எப்படி சமாளிக்கப்போகிறது என்பது விரைவில் நடக்க உள்ள பொதுக்குழுவில் தெரிந்துவிடும்.

Courtesy: vikatan.com

 

Read previous post:
0a1c
“ஜெ. மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்!” – சுப.உதயகுமாரன்

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், பச்சை தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமாரன் கூறியிருப்பதாவது: தமிழக மக்களாகிய நாங்கள், முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் 75

Close