“மறுபடியும் ஆயுதம் ஏந்தும் குற்றத்துக்கு எங்களை ஆளாக்கி விடாதீர்கள்”: எச்.ராஜாவுக்கு பாரதிராஜா எச்சரிக்கை!

தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று ஒருங்கிணைத்த விழாவில் கலந்துகொண்ட கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து, வைணவ சமய ஆழ்வாளர்களுள் ஒருவராக கருதப்படும் ஆண்டாள் குறித்து வெளிநாட்டில் வாழும் ஓர் ஆய்வாளர் வெளியிட்ட ஒரு கருத்தை முன்வைத்தார்.

இதற்கு தமிழகத்தில் உள்ள சங்கிகள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள். இவர்களுக்கு விளக்கம் அளித்த வைரமுத்து, “எவரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. யாரேனும் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்” என்று வருத்தம் தெரிவித்துவிட்டார்.

இதன்பின்னரும் பார்ப்பன சங்கியும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளருமான ஹரிஹர ராஜா சர்மா எனப்படும் எச்.ராஜா, நாக்கில் நரம்பில்லாமல், சொல்ல நா கூசும் அளவுக்கு வைரமுத்துவையும், அவரது வீட்டுப் பெண்களையும் இழிவாக தரம் தாழ்ந்து சாடியுள்ளார்.

எச்.ராஜாவின் இந்த அநாகரிகமான பேச்சுக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா, திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட முற்போக்கு – ஜனநாயக சக்திகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது இயக்குனர் பாரதிராஜாவும் இணைந்துள்ளார். “மறுபடியும் ஆயுதம் ஏந்தும் குற்றத்துக்கு எங்களை ஆளாக்கி விடாதீர்கள்” என்று எச்.ராஜாவுக்கு பாரதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாரதிராஜாவின் வீடியோ அறிக்கை:-

.

Read previous post:
k8
Kalakalappu 2 Movie Press Meet Stills

Kalakalappu 2 Movie Press Meet Stills

Close