அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தரலாம் என பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா ஒன்றிய மனித வளத்துறைக்கு கடிதம் ஒன்றை தன்னிச்சையாக எழுதி இருந்தார். அதில் பல்வேறு விஷயங்களை அவர் குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனைத்தொடர்ந்து தற்போதைய நிலையிலேயே பல்கலைக்கழகத்தை மேம்படுத்த தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. அதில் துணைவேந்தர் சூரப்பா கூறியது போல அண்ணா பல்கலைக்கழகத்தால் தனியாக நிதி திரட்ட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் சிறப்பு அந்தஸ்து குறித்து ஆலோசிக்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவில், கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்

Read previous post:
0a1b
10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு: விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் எப்போது?

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால்

Close