“ரூ.2000 நோட்டை திரும்ப பெறும் திட்டம் இல்லை!” – அருண் ஜேட்லி

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு அறிமுகப்படுத்திய புதிய 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த ஜேட்லி, இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் டிசம்பர் 10, 2016 தேதி வரை, ரூ.12.44 லட்சம் கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் பேசிய ஜேட்லி, ”இந்த புள்ளிவிவரத் தொகை கையில் இருக்கும் ரொக்கப் பணத்தோடு ஒப்பிடப்படும். இதன்மூலம் தவறுகளையும், இரண்டு முறை எண்ணப்பட்ட தொகையையும் கண்டறியலாம். கள்ளப்பணத்தையும் இதன் மூலம் ஒழிக்கமுடியும்.

மார்ச் 3, 2017 அன்று, ரூ.12 லட்சம் கோடிகளும், ஜனவரி 27 அன்று ரூ.9.921 லட்சம் கோடிகளும் புழக்கத்தில் இருந்தன” என்று தெரிவித்தார்.

Read previous post:
0
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் கங்கை அமரன்!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை பாஜக மத்திய தேர்தல் குழு செயலர் ஜே.பி.நட்டா

Close