சூர்யாவின் ‘24’ – முன்னோட்டம்!

சூர்யா, சமந்தா, நித்யாமேனன், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ’24’. விக்ரம் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது.

நாளை (மே 6ஆம் தேதி) திரைக்கு வரும் இப்படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து உலகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகின்றன.

இது ஓர் அறிவியல் புனைவுக்கதை திரைப்படம். நிகழ்காலத்திலிருந்து இறந்தகாலத்துக்கும், எதிர்காலத்துக்கும் போய்வரக் கூடிய ‘டைம் டிராவல்’ எனப்படும் காலப் பயணத்தை மையமாகக்கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக டைம் டிராவல் கதைகள் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு பிடித்தமானவை. இதற்கு தமிழ் ரசிகர்களும் விலக்கு அல்ல. மேலும், இப்படிப்பட்ட முழுநீள டைம் டிராவல் கதையில் ஒரு தமிழ் மாஸ் ஹீரோ நடிப்பது இதுதான் முதல்முறை என்பதால், சூர்யாவின் ‘24’ படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

0a1d

இப்படத்தில் சூர்யா ஹீரோ, வில்லன் என 3 கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். எந்தப் படத்திலும் இதுவரை சூர்யா வில்லன் வேடத்தில் நடித்ததில்லை. அதனால் சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பைக் காணவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

சூர்யாவின் திரை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, உலகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

இப்படத்தை குடும்பத்துடன் பார்க்கும் வகையில் தணிக்கைக் குழு ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இயக்குநர் விக்ரம் குமார் “படத்தைப் பார்க்கும் 6 வயது சிறுவன்கூட இப்படத்தின் கதையை புரிந்து கொள்ள முடியும்” என்று கூறியிருக்கிறார். இதனால் குடும்பத்துடன் இப்படத்தைக் கண்டுகளித்திட ரசிகர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். இதுதவிர கோடை விடுமுறையில் வெளியாவதும் படத்தின் மிகப்பெரிய பலமாக மாறியிருக்கிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான ’24’ பாடல்கள் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இதனால் பாடல்களின் விஷுவல் காட்சிகளை கண்டு களித்திடவும் ரசிகர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

‘24’ படத்தை சிறப்புக்காட்சியில் ஏற்கெனவே பார்த்துவிட்ட வட இந்தியா சினிமா விமர்சகர் ஒருவர் கூறியிருப்பது:-

“இப்படம் பிரமாண்டமாக உள்ளது, அது ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் தெரிகிறது. சூர்யா மற்றும் சமந்தாவின் காதல் காட்சிகள் மிகவும் அழகாக இருக்கின்றன. சூர்யா இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதிலும் நெகட்டிவ் கதாபாத்திரம் மிகவும் ஈர்க்கிறது, விருதுகளை அந்த கதாபாத்திரம் தட்டிச்செல்லும். படத்தின் இடைவேளை மிகவும் எமோஷனலாக உள்ளது, அதைவிட பல திருப்பங்கள் உள்ளன. கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும்.”

0a3j