திரிஷா நடிக்கும் ‘1818’: இரு மொழிகளில் தயாராகிறது!

மைண்ட் டிராமா என்ற பட நிறுவனம் சார்பாக தயாராகும் படத்திற்கு “1818” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். அவருடன் சுமன், ராஜேந்திரபிரசாத், பிரமானந்தம், சூது கவ்வும் ரமேஷ் திலக், ராஜா ராணி படத்தில் நடித்த மீரா கோஷல் ஆகியோர் நடிக்கிறார்கள்.

தீவிரவாதிகளால் மும்பை முற்றுகையிடப்பட்டு, பலர் கொல்லப்பட்ட பரபரப்பான சம்பவங்களை மையமாக வைத்து விறுவிறுப்பான படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் இதனை எழுதி இயக்கும் ரிதுன்சாகர்.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

ஒளிப்பதிவு – ஓம்பிரகாஷ்

இசை – எஸ்.எஸ்.தமன்

பாடல்கள் – மதன் கார்க்கி

ஊடகத்தொடர்பு – மௌனம் ரவி