ரேடியோ ஜாக்கியை காதல் திருமணம் செய்கிறார் நடிகர் ரமேஷ் திலக்!

ரேடியோவில் நிகழ்ச்சிகளை வழங்குபவராக, ரேடியோ ஜாக்கியாக இருந்து தமிழ் திரையுலகுக்குள் அடியெடுத்து வைத்தவர் நடிகர் ரமேஷ் திலக். குணச்சித்திர நடிகராக வளர்ந்துவரும் இவர், பரபரப்பாக பேசப்பட்ட ‘சூது கவ்வும்’, தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’, தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘மோ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நயன்தாரா நாயகியாக நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’, ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இவரும், சென்னையில் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்து வரும் நவலட்சுமியும் சில காலமாக காதலித்து வருகிறார்கள். இவர்களின் திருமணத்துக்கு இரு வீட்டாரும் தற்போது சம்மதம் தெரிவித்துவிட்டதை அடுத்து, இருவரும் தங்கள் காதலை, புகைப்படங்களுடன் ட்விட்டரில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த (2017ஆம்) ஆண்டு இறுதியில் இவர்கள் திருமணம் நடைபெறும் என தெரிகிறது.