விஜய்யின் ‘பைரவா’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்: ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ்!

‘பாதாள பைரவி’, ‘மாயாபஜார்’, ‘மிஸ்ஸியம்மா’, எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்கவீட்டு பிள்ளை’, ‘நம் நாடு’, ரஜினிகாந்த் நடித்த ‘உழைப்பாளி’, கமல்ஹாசன் நடித்த ‘நம்மவர்’ மற்றும் ‘தாமிரபரணி’, ‘படிக்காதவன்’, ‘வேங்கை’, ‘வீரம்’ உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.

பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில்  பி.பாரதி ரெட்டி, விஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்தை ஏராளமான பொருட்செலவில் மிகவும் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர்களுடன் ஜெகபதிபாபு, சதீஷ், ஒய்.ஜி.மகேந்திரன், தம்பி ராமையா, டேனியல் பாலாஜி, மைம் கோபி, ‘ஆடுகளம்’ நரேன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி, பரதன் இயக்கும் ‘பைரவா’ படத்துக்கு, வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

‘பைரவா’ படத்தின் டீசர் வெற்றிக்குப் பின் ‘பைரவா’ ட்ரெய்லர் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு வெளியாகி, ரசிகர்களிடம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ‘பைரவா’ ட்ரெய்லரை இதுவரை 50 லடசம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இத்திரைப்படத்தை சென்சார் குழுவினர் இன்று பார்த்து, படத்தை பாராட்டி, படத்துக்கு “யு “ சான்றிதழ் வழங்கியுள்ளனர். “யு “ சான்றிதழ் பெற்றுள்ள பைரவா பொங்கல் விருந்தாக, வருகிற ஜனவரி 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

 

Read previous post:
0a1a
ரேடியோ ஜாக்கியை காதல் திருமணம் செய்கிறார் நடிகர் ரமேஷ் திலக்!

ரேடியோவில் நிகழ்ச்சிகளை வழங்குபவராக, ரேடியோ ஜாக்கியாக இருந்து தமிழ் திரையுலகுக்குள் அடியெடுத்து வைத்தவர் நடிகர் ரமேஷ் திலக். குணச்சித்திர நடிகராக வளர்ந்துவரும் இவர், பரபரப்பாக பேசப்பட்ட ‘சூது

Close