தேனாண்டாள் நிறுவனத்தின் நாடக போஸ்டர்: மணிரத்னம் வெளியிட்டார்!

தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களைத் தயாரித்தும், விநியோகம் செய்தும் வரும் பிரபல முன்னணி நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், தேனாண்டாள் என்டர்டெய்ன்மென்ட் எனும் பெயரில் கச்சேரி மற்றும் நாடகங்களையும் தயாரித்து வருகிறது.

இந்நிறுவனம் சார்பாக தற்போது தயாராகி வரும் ஹிந்தி நாடகம் ‘மேரா ஹோ மத்லப் நஹி தா’ (Mera Woh Mathlab Nahi Tha). இதை ராகேஷ் ரெட்டி இயக்குகிறார். அனுபம் கேர், நீனா குப்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த நாடகத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குனர் மணிரத்னம் வெளியிட, தயாரிப்பாளர் முரளியின் துணைவியார் ஹேமா ருக்மணி பெற்றுக்கொண்டார்.

இந்நாடகம் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் சென்னை மியூசிக் அகாடமியில் அரங்கேற்றப்பட உள்ளது.

இதன்மூலம் கிடைக்கும் வசூலை ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவுக்காக பயன்படுத்த தேனாண்டாள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

t4

Read previous post:
0a2u
En Appa – Director S.P.Jananathan Speaks About His Father

Close