‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’: 400க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடுகிறார் வி.சத்யமூர்த்தி 

தரமான திரைப்படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது ‘கிளாப்போர்ட்’ தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிறுவனரான வி.சத்யமூர்த்தி, தற்போது விஜய் சேதுபதி – கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள  ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தை தமிழகமெங்கும் 400க்கும் அதிகமான திரையரங்குகளில், வருகின்ற பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிடுகிறார்.

“இதுவரை நான் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’  படத்தை பார்க்கவில்லை. ஏனென்றால் எனக்கு விஜய் சேதுபதி சார் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அதுமட்டுமின்றி, விஜய்சேதுபதி – கெளதம் கார்த்திக் ஆகியோரின் இந்த புதிய கூட்டணி நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களாலும் வரவேற்கப்படும் என்று முழுமையாக நம்புகிறேன்.

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’  படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு அடையாளத்தை பதிக்க இருக்கிறார் இயக்குநர் ஆறுமுககுமார். இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை ‘மினிமம் காரண்ட்டி’ முறையில் வாங்கி இருப்பது பெருமையாக இருக்கிறது. வருகின்ற பிப்ரவரி 2ஆம் தேதி அனைவருக்கும் நல்ல நாளாக இருக்கும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் வி.சத்யமூர்த்தி.

 

Read previous post:
0a1c
Padaiveeran – Official Trailer

Presenting the Official Trailer of "Padaiveeran"; Written & Directed by Dhana; Music Composed by Karthik Raja; starring Vijay Yesudas, Bharathiraja,

Close