இயக்குனர் கௌதம் மேனன் வெளியிட்ட ‘சத்ரு’ படத்தின் மோஷன் போஸ்டர்!

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்ரு’.

24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு எடுக்கப்படும் இந்த ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். ‘ராட்டினம்’ படத்தில் நடித்த லகுபரன் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –   மகேஷ் முத்துசாமி

இசை  –  அம்ரிஷ்

பாடல்கள்   –  கபிலன், மதன் கார்க்கி, சொற்கோ

எடிட்டிங்   –  பிரசன்னா.ஜி.கே

கலை  –  ராஜா மோகன்

ஸ்டண்ட்   –  விக்கி

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  நவீன் நஞ்சுண்டான்

விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் கெளதம் மேனன் வெளியிட்டார்.

மோஷன் போஸ்டர்: