காதல் துரோகியும், நரேந்திர மோடியும்!

ஒரு பையன் ஒரு பொண்ணை காதலித்து வந்தான். நன்றாக ஊர் சுத்தினார்கள். அவள் திருமணத்தை பற்றி கேட்டபோது, “இரண்டு மாதம் பொறுத்துக்கோ. இரண்டு மாதம் முடிவில் தேதியை அறிவிக்கிறேன்” என்றான்.

அந்த பொண்ணும் மகிழ்ச்சி அடைந்தாள். ‘இரண்டு மாதம் தான் கஷ்டம். இரண்டு மாத முடிவில் திருமண தேதியை அறிவிப்பார்’ என்று காத்திருந்தாள்.

அந்த நாளும் வந்தது. அவன் அவளிடம் வந்தான். அவள் பட்ட துன்பங்களை எல்லாம் விவரித்து பாராட்டினான். திருமணத்தின்போது எப்படி எல்லாம் அலங்காரம் பண்ண வேண்டும், எத்தனை பவுன் தாலி போடுவான், எத்தனை ரூபாய்க்கு பட்டு சேலை வாங்கி கொடுப்பது என்பது முதல், பிள்ளைகளை எந்த பள்ளியில் எப்படி படிக்க வைக்க வேண்டும் என்பது வரை விவரமாக சொன்னான்

பொண்ணும் மிக ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆனால், கடைசி வரை திருமண தேதியை அவன் சொல்லவே இல்லை. அந்த பெண் விரக்கிதியின் உச்சத்திற்கே போய்விட்டாள்…

இப்படி தான் நம் மோடியின் கதையும். “50 நாளில் எல்லாம் சரியாகும்” என்றார். ஆனால் ஐம்பது நாள் முடிந்த புத்தாண்டில் எதேதோ அறிவிப்பு கொடுக்கிறார். ஆனால் இந்த் கறுப்பு பண ஒழிப்பு பற்றியும், அதனால் கிடைத்த நன்மை பற்றியும் வாய் திறக்கவே மறுக்கிறார்…

‘என்னடா… இவன் லவ் ஸ்டோரி சொல்லிட்டு, கடைசியில் இங்கே கொண்டு வந்து நிறுத்துகிறானே என்று பார்கிறீர்களா…?

நமக்கு தெரிந்தது எல்லாம் இதுதான்பா….!

(படித்ததில் பிடித்தது)

Read previous post:
0a1b
விஜய்யின் ‘பைரவா’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்: ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ்!

‘பாதாள பைரவி’, ‘மாயாபஜார்’, ‘மிஸ்ஸியம்மா’, எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்கவீட்டு பிள்ளை’, ‘நம் நாடு’, ரஜினிகாந்த் நடித்த ‘உழைப்பாளி’, கமல்ஹாசன் நடித்த ‘நம்மவர்’ மற்றும் ‘தாமிரபரணி’, ‘படிக்காதவன்’, ‘வேங்கை’,

Close