வாழ்த்துக்கள் மேடம் – வயித்தெரிச்சலுடன்…!

ஒருத்தனுக்கு பிடிக்கலைன்னா பரவாயில்ல, ஒருத்தனுக்கு கூட பிடிக்கலைன்னா எப்படி?

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம, மக்கள் ஆதரவு கொஞ்சம் கூட இல்லை என்பதை அறிந்தும் கூட,  இப்படி எல்லோருடைய வயிற்றெரிச்சல கொட்டிக்கிட்டு, அப்படி ஒரு பதவி உனக்கு  தேவையா?

நீங்க யாரு, உங்க கூட்டம் எப்படி பட்டதுன்னு அந்த அம்மாவே மக்கள் மனசுல தெளிவா பதிய வச்சிட்டுதான் போயிருக்கு. அந்த அம்மா ஊழலில் உலக அளவில் புகழ் பெற, பேசப்பட  நீங்க தான் காரணம் என்பது ஊரறிந்த ஒன்று. மாபியா கும்பல் என்பதின் அர்த்தமே, எங்க சனங்களுக்கு, உங்க குரூப்க்கு பேர் வச்ச பிறகுதான் தான் தெரியும்.

இப்ப  நீங்க தனி ஆளு இல்ல. உங்க பின்னாடி கதை வசனம் எழுதறவங்க, டைரக்டர் என பெரிய குரூப்பே இருப்பது மக்கள் அனைவர்க்கும் தெரியும். வாந்தி டிவி, வதந்தி பேப்பர் போன்ற (முன்னாள் வெகுஜன) வெகுஜன ஊடகங்கள், உங்களை பற்றி, ஒரு நாளைக்கு 27 மணி நேரம், வருடத்திற்கு 465 நாள் மக்களுக்காகவும் கட்சிக்காகவும் உழைக்கிறார், எளிமையானவர், நேர்மையானவர் , கண்டிப்பானவர், எளிதில் அணுகக்கூடியவர் , வாழும் பெண் காமராஜர், ஜான்சி ராணி போல் துணிச்சலானவர் என எழுதவும், தாயுள்ளம் கொண்டவர்னு ரெண்டு கிழவியை நீங்க கட்டிப் பிடிச்ச மாதிரி படம் போட்டு மக்களை முட்டாள் ஆக்கவும்  ஊடகங்கள் உங்கள் பின்னால் இருப்பதையும் மக்கள் அறிந்தே உள்ளனர்.

நாட்டு நலனில் மிகுந்த அக்கறையுள்ள, தற்போதும் “மக்கள் மத்தியில் மிக செல்வாக்கோடு இருக்கும்”(?) அந்த 130 பேர், மேல 50 பேர், மாவட்ட, நகர, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் சில தேச நலனில் அக்கறையுள்ள அவர்களுடைய விழுதுகள் சில ஆயிரம் பேர் (தமிழகத்தின் மக்கள் தொகை 7 .5 கோடி, அந்த அம்மா இருக்கும்போது கட்சியில் 1 கோடி தொண்டர்கள் இருந்தது நினைவில் கொள்க) தமிழகத்தை தூக்கி நிறுத்த ஒரு “பொதுவான நல்ல நோக்கத்திற்காக”(?) தங்கள் பின் அணிவகுத்து இருப்பதையும் மக்கள் அறிவர் .

நீங்க மக்களை கவர, மக்கள் மனதில் இடம் பெற (மக்களை முட்டாளாக்க) மதுவிலக்கு, செத்துப்போன விவசாயிகளுக்கு பணம், ஆடு, மாடு, லேப்டாப், பென்சு காரு, மஞ்சள் கயிறுக்கு பதிலா தங்க  தாலி, ரேஷனில் பாசுமதி அரிசி, சத்துணவில் தினமும் சிக்கன் 65 வழங்கப் போவதாக சிலர் ஊடகங்களில் எழுதி வருகின்றனர்.

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளவும் .நாயை விலை கொடுத்து வாங்கலாம்; ஆனால் அதன் வாலை விலை கொடுத்து ஆட்ட வைக்க உங்கள் பணத்தால் முடியாது. மக்கள் ஒண்ணும் அந்த 130 பேர் போல் அல்ல.

வாழ்த்துக்கள் மேடம் – வயித்தெரிச்சலுடன்…!

UMAR FAROOQ

 

Read previous post:
0
“ஓ.பி.எஸ்ஸா, சசிகலாவா என்பது இருக்கட்டும்; தீபா கூடவே கூடாது!”

காலைல இருந்து தீபா பேட்டி எடுக்க செய்தியாளர்கள் எல்லாம் அவங்க வீட்ல காத்துட்டு இருக்கோம். “தீபா தூங்கிட்டு இருக்காங்க, எழுந்திருக்கலை”னு அப்பப்போ தீபா கணவர் வந்து பதில்

Close