ஆஸ்கருக்கு ‘விசாரணை’ பரிந்துரை: “பொறுப்பு அதிகரித்திருக்கிறது!” – வெற்றிமாறன்

காவல்துறையின் அப்பட்டமான மனிதஉரிமை மீறல்களையும், கொடூரமான காட்டுமிராண்டித்தனங்களையும் தோலுரித்துக் காட்டிய ‘விசாரணை’ திரைப்படம், வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

இது குறித்து இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் கூறுகையில், “ஆஸ்கர் விருதுக்கு விசாரணை படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் எனக்கு பொறுப்புகள் அதிகரித்துள்ளதாக உணருகிறேன். இந்த படம் இன்னும் வெகுஜன ரசிகர்களை சென்று சேர இது உதவும் என நம்புகிறேன். ‘விசாரணை போன்ற’ திரைப்படங்களை அனைத்துத் தரப்பினரும் ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Read previous post:
visaranai_oscar
அரச பயங்கரவாதத்தை தோலுரிக்கும் ‘விசாரணை’: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை!

வெற்றிமாறன் இயக்கி கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த "விசாரணை" திரைப்படம், ஆஸ்கரின் சிறந்த வெளிநாட்டு பட விருதுக்காக இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உத்தா பஞ்சாப், திதி, சாய்ராட் போன்ற

Close