ஆஸ்கர் விருதுக்கு ‘விசாரணை’ பரிந்துரை: “பெருமையான தருணம்!” – தனுஷ்

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு, இந்தியாவில் இருந்து அதிகாரபூர்வமாக ‘விசாரணை’ தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ‘”விசாரணை’ படம் ஆஸ்கருக்கு தேர்வாகியுள்ளது எனது வுண்டர்பார் நிறுவனத்துக்கும், இயக்குனர் வெற்றிமாறனுக்கும் மிகப் பெருமையான தருணம். நடிகர்கள் தினேஷ், சமுத்திரக்கனி, கிஷோர், வினோத் என பலருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஊடகங்களுக்கும், இந்த படத்தை திரையரங்கில் வந்து பார்த்தவர்களுக்கும் மிக்க நன்றி” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Read previous post:
0a
ஆஸ்கருக்கு ‘விசாரணை’ பரிந்துரை: “பொறுப்பு அதிகரித்திருக்கிறது!” – வெற்றிமாறன்

காவல்துறையின் அப்பட்டமான மனிதஉரிமை மீறல்களையும், கொடூரமான காட்டுமிராண்டித்தனங்களையும் தோலுரித்துக் காட்டிய ‘விசாரணை’ திரைப்படம், வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

Close