விக்ரம் பிரபுவின் ‘வீரசிவாஜி’ இசை வெளியீடு!

ஜெயம் ரவி – ஹன்சிகா நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால், அடுத்து தயாரித்திருக்கும் படம் ‘வீரசிவாஜி’.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி கணேஷ் விநாயக் இயக்கியிருக்கும் இப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபுவும், கதாநாயகியாக நடிகர் அஜித்குமாரின் மைத்துனியும், ந்டிகை ஷாலினியின் தங்கையுமான ஷாம்லியும் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

‘வீரசிவாஜி’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. நடிகர்கள் விக்ரம் பிரபு, ரோபோ சங்கர், யோகி பாபு, இயக்குனர் கணேஷ் விநாயக், இசையமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் உள்ளிட்ட படக்குழுவினர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

0a1l

படம் பற்றி இயக்குனர் கணேஷ் விநாயக் கூறுகையில், “இது கமர்ஷியல் படம். ஆனால் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கிற மாதிரியான ஜனரஞ்சக படம்.  ஊரையே கொள்ளையடித்து வாழும் ஒருவனிடமிருந்து அந்த ஊர் மக்களை காப்பாற்ற போராடி வெற்றிபெறும் வீரமான இளைஞனாக வரும் விக்ரம் பிரபுவின் கதாபாத்திரப்பெயர் சிவாஜி. அதுதான்  படத்திற்கான தலைப்பாக ‘வீரசிவாஜி’யாக உருவாகி உள்ளது. பாடல் காட்சிகள் ஜார்ஜியாவிலும், இதர காட்சிகள் பாண்டிச்சேரியிலும்  படமாக்கப்பட்டுள்ளன.  படம் விரைவில் திரைக்கு வருகிறது” என்றார்.

எடிட்டிங் – ரூபன்

வசனம் – ஞானகிரி, சசி பாலா

பாடல்கள் – யுகபாரதி, கபிலன், ரோகேஷ்

கலை – லால்குடி இளையராஜா

நடனம் – தினேஷ்

ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன்

ஊடகத்தொடர்பு – மௌனம்ரவி

Read previous post:
0a1l
ரோசய்யா – வெளியே! பாஜகவின் வித்யாசாகர் ராவ் – உள்ளே!!

மகாராஷ்டிரா மாநில ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.

Close