பெண் இயக்குனரின் ‘அபியும் அணுவும்’ படத்தில் முத்தக்காட்சி! 

பி.ஆர்.விஜயலக்ஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அபியும் அணுவும்’ படத்தில், கேரளா சினிமா உலகின் வளர்ந்துவரும் கதாநாயகர்களில் ஒருவரான டோவினோ தோமஸுக்கு  பியா பாஜபாய் ஜோடியாக நடித்துள்ளார். இந்த காதல் படத்தில் முத்தக்காட்சி இடம்பெற்றுள்ளது.

”ஒரு அழகான, ஆழமான காதல் கதையை திரையில் பார்த்து வெகு காலம் ஆகிவிட்டது. இதனை அறிந்த நானும் எனது அணியினரும் இந்த தலைமுறையின் ரசனைக்கேற்ப ஒரு அழகான மற்றும் துணிச்சலான காதல் கதையை உருவாக்கியுள்ளோம். இப்படத்தின் ஒரு முக்கியமான காட்சிக்காக, கதையின் தேவைக்கேற்ப டோவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாயை வைத்து  ஒரு முத்தக்காட்சியை படமாக்கியுள்ளோம். இந்த காட்சியை அவர்களிடம் கூறியபொழுது முழு ஒத்துழைப்பு தந்து, எந்த வித தயக்கமும் இன்றி நடித்துக் கொடுத்தார்கள். அக்டோபர் மாதம் ‘அபியும் அணுவும்’ ரிலீசாகும். இந்த வித்தியாசமான, துணிச்சலான காதல் கதையை  இளைஞர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள்” என நம்புகிறேன்” என நம்பிக்கையோடு கூறினார் இயக்குனர் பி.ஆர். விஜயலக்ஷ்மி.

0a1d

இப்படத்தில் பிரபு, சுஹாசினி, ரோகினி, மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘Yoodlee Films’ தயாரிப்பில் ‘அபியும் அணுவும்’ உருவாகியுள்ளது. இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில்  ஒருவரான சந்தோஷ் சிவன் இப்படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். தரனின் இசையில், மதன் கார்க்கியின் பாடல் வரிகளில், அகிலனின் ஒளிப்பதிவில், சுனில் ஸ்ரீ நாயரின் படத்தொகுப்பில்  உருவாகியுள்ள ‘அபியும் அணுவும்’ படத்தின் கதை மற்றும் திரைக்கதையை உதயபானு மகேஸ்வரன் எழுதியுள்ளார்.