விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆரம்பமே அட்டகாசம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சுவாதி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரிப்பில், ரங்கா இயக்கத்தில், ஜீவா கதாநாயகனாக நடிக்கும் ‘ஆரம்பமே அட்டகாசம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சேதுபதி இன்று வெளியிட்டார்.

‘ஆரம்பமே அட்டகாசம்’ படத்தின் இயக்குனர் ரங்காவை, அவர் உதவி இயக்குனராக இருக்கும்போதிலிருந்தே தனக்கு தெரியும் என்றும், அவர் வெற்றி பெற வேண்டும் எனவும் விஜய் சேதுபதி வாழ்த்தினார். மேலும், இப்படத்தின் கதாநாயகன் ஜீவாவிடம், படத்தின் தலைப்பைப் போலவே படமும் ஆரம்பமே அட்டகாசமாக அமைய தன் வாழ்த்தினை தெரிவித்தார் விஜய் சேதுபதி.

இப்படத்தின் டீஸரை வரும் 5ஆம் தேதி வினாயகர் சதுர்த்தி தினத்தன்று விஜய் சேதுபதி வெளியிட உள்ளார்.

Read previous post:
k7
Kuttram 23 Movie Audio Launch Stills

Close