“எனக்கும் நந்திதாவுக்கும் முக்கியமான படம் ‘உள்குத்து”! – அட்டக்கத்தி தினேஷ்

‘திருடன் போலீஸ்’, ‘ஒரு நாள் கூத்து’ ஆகிய திரைப்படங்களை தயாரித்த ‘கெனன்யா பிலிம்ஸ்’ ஜெ.செல்வகுமாரின் மூன்றாவது திரைப்படம்  ‘உள்குத்து’. அட்டக்கத்தி தினேஷ் – நந்திதா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தை இயக்கி இருக்கிறார் கார்த்திக் ராஜு.

ஸ்ரீமன், பாலசரவணன், ஷரத் லோகிதஸ்வா, திலீப் சுப்பராயன், ஜான் விஜய், சாயாசிங், முத்துராமன், செஃப் தாமோதரன், மிப்புசாமி, கதிர், ஃப்ரின்ஸ், ஜெயவாணி, மூணார் ரமேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இதன் இணை தயாரிப்பாளர் ஜி.விட்டல்குமார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா. படத்தொகுப்பாளர் கே.எல்.பிரவீன். ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன். கலை இயக்குனர் விதேஷ்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. அட்டக்கத்தி தினேஷ், நந்திதா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் இதில் கலந்து கொண்டார்கள்.

u6

“உள்குத்து திரைப்படம் என்னுடைய திரைப்பட வாழ்க்கையில் மட்டுமின்றி, கதாநாயகி நந்திதாவின் திரைப்பட வாழ்க்கையிலும் முக்கியமான மைல் கல்லாக அமையும் என நம்புகிறேன். ஒவ்வொரு காட்சியையும் அற்புதமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜு. படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு எந்த விதத்திலும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது” என்றார் இதன் கதாநாயகன் தினேஷ்.

“இந்த திரைப்படம் முழுவதும் நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள ‘முட்டம்’ பகுதியில் படமாக்கப்பட்டிருக்கிறது. எனக்கு தெரிந்து இயக்குனர் பாரதிராஜா சாருக்கு பிறகு, முட்டம் பகுதியை நன்கு ஆராய்ந்து அங்கே படப்பிடிப்பு நடத்தியவர் இயக்குனர் கார்த்திக் ராஜு தான். கெனன்யா பிலிம்ஸின் ஜெ.செல்வகுமார் சார் தேர்ந்தெடுக்கும் கதை களங்கள் அனைத்தும் ரசிகர்களின் உள்ளத்தோடு பயணிக்க கூடியவை” என்றார் நடிகர் ஸ்ரீமன்.

“உள்குத்து’ திரைப்படம் மீனவர்களை சார்ந்து நகராது. மாறாக, மீன் வெட்டும் தொழிலாளர்களை சார்ந்து  நகரும். அப்படி மீன் வெட்டும் தொழிலாளரான தினேஷின் உள்குத்து என்ன என்பதே எங்கள் ‘உள்குத்து’ படத்தின் கதை. நிச்சயமாக பிற மொழிகளில் ரீமேக் செய்ய தேவையான அனைத்து சிறப்பம்சங்களும் இப்படத்திற்கு இருக்கிறது” என்றார் இதன் தயாரிப்பாளர் ஜெ.செல்வகுமார்.