குளிக்கும் இடத்துக்குள் திடீரென புகுந்த ஆளுநர்! குளித்துக் கொண்டிருந்த பெண் அலறல்!!

கடலூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூய்மை இந்தியா திட்ட ஆய்வுப் பணிகளை இன்று மேற்கொண்டார். அப்போது, வண்டிப்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதிக்குச் சென்ற அவர், திடீரென்று தன்னுடைய காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார்.

ஏழை எளிய குடும்பங்கள் வாழும் அந்த பகுதியிலிருந்த ஒரு வீட்டின் வெளியே இருந்த குளிக்கும் இடத்துக்குள் ஆய்வுக்காக ஆளுநர் நுழைந்தார். அங்கு கீற்று மறைப்பில் குளித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர், இவரைக் கண்டதும் பயந்து பதறிப் போனார். என்ன ஏது என்று தெரியாமல் அலறிய அந்த பெண், பக்கத்தில் கிடந்த துணிகளை வாரி உடலில் சுற்றிக்கொண்டு, ஓட்டோட்டமாய் ஓடி தன் வீட்டுக்குள் புகுந்துகொண்டார்.

ஆளுநரின் இந்த வினோத ஆய்வை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகளும் அதிர்ந்து போனார்கள். பின்னர் இந்த அசம்பாவித சம்பவம் பற்றி ஊடகங்களிடம் பேசவோ, போலீசிடம் புகார் கொடுக்கவோ கூடாது என்று அந்த பெண்ணை அதிகாரிகள் மிரட்டி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.