ஆண்களே இல்லாமல் பெண்கள் மட்டுமே நடிக்கும் படம் ‘திரைக்கு வராத கதை’!

மம்முட்டி, மோகன்லால் மற்றும் கேரளாவின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல மலையாளப் படங்களை இயக்கியவர் துளசிதாஸ். அவர் இயக்கியுள்ள முதல் தமிழ்ப்படம் ‘திரைக்கு வராத கதை’.

எம்.ஜே.டி. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.மணிகண்டன் தயாரித்துள்ள இப்படத்தில் ஒரேயொரு காட்சியில்கூட ஆண்கள் இல்லை. முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கும் படம் இது.

சிறிய இடைவெளிக்குப்பின் நதியா இதில் நடித்துள்ளார். அவருடன் இனியா, ஈடன்,  கோவை சரளா, ஆர்த்தி, சபிதா ஆனந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

திரைப்பட கல்லூரி மாணவிகள் சிலர் சேர்ந்து சொந்தமாக ஒரு படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அப்போது, கதையின் சம்பவங்கள் உண்மை சம்பவங்களாக மாறுகின்றன. இதனை அடிப்படை கதையாகக் கொண்டு, த்ரில்லர், சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி கலந்த படமாக உருவாகியிருக்கிறது ‘திரைக்கு வராத கதை’

பாடல்கள், ட்ரெய்லர் மூலம் கவனம் ஈர்த்துள்ள இந்த திரைப்படத்தை இம்மாதம் ‘ராகுல் பிலிம்ஸ்’ வெளியிடுகிறது.

பாடலிசை – எம்.ஜி.குமார்

பின்னணி இசை – அரோல் கொரோலி

ஒளிப்பதிவு – சஞ்சீவ் சங்கர்

வசனம் – துரைப்பாண்டியன்

பாடல்கள் தமிழமுதன், பரிதி, சக்திகிருஷ்ணா

ஸ்டண்ட் – மாஃபியா சசி

Read previous post:
0a
கள்ளாட்டம் – விமர்சனம்

பகல் கொள்ளை அடிப்பதற்கு தான் தனியார் மருத்துவமனை, சட்டவிரோதமாக கொடுமைகள் செய்வதற்கு தான் காவல்துறை என்ற கசப்பான யதார்த்தம் பல்லிளித்துக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், யதார்த்தத்துக்கு புறம்பாய் தனியார்

Close