தெலுங்கு நடிகை அனிஷாவுடன் தான் திருமணம்: உறுதி செய்தார் விஷால்

தனக்கும் தெலுங்கு நடிகை அனிஷா ஆல்லா ரெட்டிக்கும் திருமணம் நடக்க இருப்பதை அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளார் நடிகர் விஷால்.

தெலுங்கில் பெரும் வாவேற்பைப் பெற்ற படம் ‘அர்ஜூன் ரெட்டி’. இப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தலை காட்டிய நடிகை அனிஷா ஆல்லா ரெட்டி. இவர் நேற்று (ஜனவரி 15) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஷாலுடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து, தனக்கும் விஷாலுக்கும் திருமணம் நடக்க இருப்பதை உறுதி செய்தார்.

இந்நிலையில், விஷாலும் முதல்முறையாக தனது ட்விட்டர் பக்கத்தில் திருமணத்தை உறுதி செய்துள்ளார். “ஆம்.. மகிழ்ச்சி… மிக்க மகிழ்ச்சி… பெண்ணின் பெயர் அனிஷா ஆல்லா. அவர் சரியென்று சொல்லிவிட்டார். எங்களது திருமணம் முடிவாகிவிட்டது. என்னுடைய வாழ்வில் மிகப் பெரும் திருப்புமுனை இதுதான். விரைவில் திருமணத் தேதியை அறிவிப்போம்” என்று தெரிவித்துள்ளார் விஷால்..

விஷாலைத் திருமணம் செய்யவுள்ளது குறித்து அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “வாழ்க்கை என்னும் பாதையில் இணைந்து பயணிக்க ஒருவரை கண்டுபிடித்துவிட்டேன். அவரையும், அவருடனான வாழ்க்கையையும் உணர்ச்சிகரமாக விரும்புகிறேன். இந்த மனிதர் தோள் கொடுக்கும் விஷயங்களுக்காக, அவரது நல்ல மனதிற்காக நான் அவரை அண்ணாந்து பார்க்கிறேன். என்னால் எவ்வளவு சிறப்பாக இருக்க முடியுமோ அப்படி இருப்பேன் என உறுதி கூறுகிறேன். எனது நோக்கம் சேர்ந்து கற்பது, அன்பு செலுத்துவது, நற்பண்புகளை தெரிந்து கொள்வது என்பதே” என்று தெரிவித்துள்ளார்.

 

Read previous post:
0a1b
‘முனி 4 காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்: ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்கள்!

சன் பிக்சர்ஸ் வழங்க, ராகவேந்திரா புரடக்‌ஷன் ராகவா லாரன்ஸின்  ‘முனி 4 காஞ்சனா 3’  படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கலன்று (நேற்று) வெளியானது. வெளியான நேற்று ஒரே நாளில்

Close