ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம்: புதுச்சேரி முதல்வருக்கு நேரில் நன்றி

புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியை சுற்றுச்சூழல் ஆர்வலர்களான பச்சைத் தமிழகம் தலைவர் முனைவர் சுப.உதயகுமாரன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணை்ப்பாளர் பேராசிரியர்  த.செயராமன், பூவுலகின் நண்பர்கள் பொறியாளர் கோ.சுந்தரராஜன், நெய்வேலி இலக்குவன், புதுவை தமிழ்மணி, தமிழ்நெஞ்சன் அத்திக்குர் ரகுமான், அபினேஷ்.ஏ.ஆர். உள்ளிட்டோர் கடந்த 27ஆம் தேதி சந்தித்தனர்..

இச்சந்திப்பின்போது, புதுவை மாநில சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி மறுத்து தீர்மானம் நிறைவேற்றியதற்கு புதுவை முதல்வருக்கு பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவிக்க வந்திருக்கிறோம் என்றார் பொறியாளர் சுந்தர்ராஜன்.

இந்த நிலைப்பாட்டில் புதுவை மாநிலம் உறுதியோடு இருக்க வேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் செயராமன் வலியுறுத்தினார். மேலும்,, காரைக்காலும், புதுச்சேரியும் காவிரிப் படுகையின் பகுதிகளாக இருப்பதால் காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்க முன்னெடுப்பைச் செய்ய வேண்டும். இது சக முதல்வர்களுக்கு முன்னுதாரணமாக அமையும் என்றும் பேராசிரியர் ஜெயராமன் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் நாராயணசாமி,, ”ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா விண்ணப்பித்தபோது அதை நிராகரித்து பதில் அனுப்பிவிட்டேன்” என்று கூறினார். புதுச்சேரி மாநில கடற்பகுதியில் 112 கிணறுகள் அமைப்பது அவர்கள் திட்டம் என்றும கூறினார்.

காரைக்காலிலும், புதுவையிலும் சேர்த்து 42 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எண்ணெய் எரிவாயு கிணறு அமைக்க இருகிறார்கள் என்பதையும், ஆழமற்ற கடற்பகுதியில் வேதாந்தா எண்ணெய் எரிவாயு கிணறு அமைக்க இருப்பது பற்றியும் பேராசிரியர் கூறியதற்கு, கடலில் 12 நாட்டிக்கல் மைல் தூரம் வரை கிணறுகள் அமைக்க விடாமல் அனுமதி மறுக்க முடியும் என்றும், அதற்கு அப்பால் உள்ள கடற்பகுதி மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்டது என்றும் முதல்வர் கூறினார்.

ஆழமற்ற கடற்பகுதியில் அமைக்கப்படும் ஒரு எண்ணெய் கிணறு 36 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஆதிக்கம்  செலுத்தும், மீனவர்கள் பாதிக்கப்படுவர், நிலத்தடிநீர்த் தொகுப்பை பாதிக்கும் என்று பேராசிரியர் கூறியதற்கு, கடலில் எண்ணெய் எரிவாயு கிணறு அமைத்தால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள், நம் மக்களுக்காக நாம்தான் போராட வேண்டும் அதில் நான் உறுதியாக இருககிறேன் என்றார் முதல்வர்.

பேராசிரியர் செயராமன் எழுதிய மீத்தேன் அகதிகள் உள்ளிட்ட மூன்று புத்தகங்களையும், மீத்தேன அகதிகள் ஆவணப்பட குறுந்தகட்டினையும் முதல்வருக்கு அளித்தார். ஆவணப்படத்தை பார்த்துவிட்டு பேசுவதாக முதல்வர் கூறினார்.

சுப.உதயகுமாரன் முதல்வரிடம் பேசியபோது, அணுக்கழிவை கூடங்குளத்திலேயே வைப்பதற்கு, முதல்வர் முன்பு அமைச்சராக இருந்தபோது வலியுறுத்தியதை நினைவுறுத்தினார். முன்பு பேசியதை இப்போது எதிர்த்து கருத்து கூறுங்கள் என கேட்டபோது. தற்போது நான் அந்த துறையில் இல்லை என்று முதல்வர் கூறினார். கூடங்குளத்திற்கு தான் தனியாக சென்றதையும், மக்கள் அன்புடன் வரவேற்றதையும் முதல்வர் நினைவு கூர்ந்தார்.

 

Read previous post:
m5
”சாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க வேண்டும்!” – சீமான்

ஆதி திரைக்களம் தயாரிப்பில் மு.களஞ்சியம் எழுதி இயக்கியுள்ள படம் முந்திரிக்காடு. இதில் சீமான், புகழ், சுபப்பிரியா, ”தியேட்டர்லேப்” ஜெயராவ், கலைசேகரன், அ.வெ.பார்த்திபன், சக்திவேல், சோமு மற்றும் பலர்

Close