‘முனி 4 காஞ்சனா 3’ மோஷன் போஸ்டர்: ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்கள்!

சன் பிக்சர்ஸ் வழங்க, ராகவேந்திரா புரடக்‌ஷன் ராகவா லாரன்ஸின்  ‘முனி 4 காஞ்சனா 3’  படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கலன்று (நேற்று) வெளியானது. வெளியான நேற்று ஒரே நாளில் அது 2 மில்லியன் பார்வையாளர்களைக்  கடந்து சாதனை படைத்திருக்கிறது.

இன்னும் சில நாட்களில் அது 10  மில்லியன் பார்வையாளர்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்தளவு வைரலாகக் காரணமான என் ரசிகர்கள், இணைய தள, பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. என் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ஹீரோக்களின் ரசிகர்களும் இந்த மோஷன் போஸ்டரைப் பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்…அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்கிறார் ராகவா லாரன்ஸ்

Read previous post:
0a1a
New Call Taxi App ‘RYDE’ launched

Ryde is a cab service started by a team of first generation entrepreneurs: focuses on enhanced customer experience resulting from

Close