ஜெயமோகனின் ‘பத்மஸ்ரீ’ மறுப்பும், பிரகாஷ்ராஜின் முறைப்பும்!

ஜெயமோகனை பத்மஸ்ரீ விருதிற்காக பாஜக அரசு தேர்ந்தெடுத்தது ஒரு இந்துத்துவ செயல்பாடு.

ஜெயமோகன் அதை வேண்டாம் என்று சொல்லியிருப்பது இன்னும் கவனமான ஒரு இந்துத்துவ செயல்பாடு.

அந்நியன் படத்தில் போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜ் ஒரு கொலைகாரனைக் கண்டுபிடிக்க மாறுவேடத்தில் வருவார்.. அவரை அடையாளம் கண்டுகொண்ட ஒரு லோக்கல் போலீஸ் அவருக்கு சல்யூட் அடிப்பார்.. பிரகாஷ்ராஜ் அவரை முறைத்து அந்த மரியாதையை தவிர்ப்பார்.. அது போன்ற சீன்தான் இது.

ஜெயமோகன் ரகசியமாக செயல்படுகிற இந்துத்துவ அடியாள். ரகசியமாக செயல்படுவது இன்னும் தீவிரமாக செயல்பட பல விதங்களிலும் அவருக்கு வசதியாக இருக்கிறது. அவருடைய ரகசிய அஜென்டாவை புரிந்து கொள்ளாத பாஜக அரசு அவசரப்பட்டு அவரை விருதுக்கு தேர்ந்தெடுத்துவிட்டது.. ஜெயமோகன் பதறிப் போய் அதை தவிர்த்திருக்கிறார்.

இது புரியாமல் சில அப்பாவிகள் ஜெயமோகன் செய்திருப்பதில் ஏதோ தியாகம் இருப்பது போலவும் , இலக்கிய நேர்மை இருப்பது போலவும், முற்போக்கு அரசியல் இருப்பது போலவும் பதிவு போடுகிறார்கள்.

இதற்கு வாயால் சிரிப்பதா அல்லது வேறு எதனாலும் சிரிப்பதா என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறேன்.

– ஆர்.பிரபாகர்

                                          # # #

 ஒரு மெய்யான கலைஞன் இரண்டு தருணங்களில் மட்டுமே தனக்கு வரும் விருதை மறுப்பான். தனக்கு விருது தரும் அரசுக்கு, அதற்கான தகுதியில்லை என்று அவன் கருதும்போது; அல்லது: தான் மதிக்கும் அரசு தனக்குத் தரும் விருதுக்கு தான் இன்னும் தகுதியானவனாகவில்லை என்று அவன் கருதும்போது. இதர மறுப்புகளெல்லாம் பம்மாத்துகளும் பிம்பக் கட்டமைப்பு உத்திகளும் மட்டுமே.

– ஞாநி சங்கரன்