ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு: தனுஷ் நெகிழ்ச்சி!

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் தனுஷ். நடிகராக மட்டுமன்றி தயாரிப்பாளர், பாடலாசிரியர் என்று பல தளங்களில் பணிபுரிந்து வருகிறார். இவர் நடித்த ஹிந்தி படங்களும் வெற்றி பெற்றதால், அங்கும் வெற்றி நாயகனாக மதிக்கப்படுகிறார்.

தற்போது முதன்முறையாக ஹாலிவுட் படத்தில் பிரதான பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ். ‘The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard’ என்ற பிரபல பிரெஞ்ச் நாவல் ஹாலிவுட் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தில் தனுஷூடன் இணைந்து ‎UmaThurman மற்றும் ‎AlexandraDaddario முக்கிய பாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தை Marjane Satrapi என்ற ஈரானிய மற்றும் பிரெஞ்ச் படங்களின் இயக்குநர் இயக்க இருக்கிறார்.

ஹாலிவுட் வாய்ப்பு குறித்து தனுஷ் கூறுகையில், “’The Extraordinary Journey Of the Fakir Who Got Trapped In The Ikea Cupboard’ என்ற முழு நீள ஹாலிவுட் படத்தில் நடிக்க எனக்கு முதன்முதலில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன். படத்தின் இயக்குநர் மழ்ஜான் சத்ராபி இந்த கதாபாத்திரத்துக்கு நான் சரியாகப் பொருந்துவேன் என நினைத்தார்.

“இதில் நடிப்பதன் மூலம் இந்த பாத்திரத்தின் பல அம்சங்களை என்னால் உணர்ந்து நடிக்க முடியும். எப்போதும் என்னுடன் இருந்து, நான் புதிய எல்லைகளைத் தொட, புதிய சவால்களை எடுத்துக் கொள்ள ஊக்குவிக்கும் எனது ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இப்படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும், இத்தாலி, மொரோகோ மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இப்படம் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read previous post:
sarathkumar-comedy1
தொண்டர்கள் விரும்பினால் தனித்து போட்டி: சரத்குமார் காமெடி!

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி. தற்போது இக்கட்சியை

Close