ஜீவா – சிவா இணைந்து கலக்கவிருக்கும் கலகலப்பான குடும்ப திரைப்படம் ‘கோல்மால்’

’மிருகா’ படத்தை தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோசின் பி வினோத் ஜெயின் அதிக பொருட்செலவில் தயாரிக்கவுள்ள ‘கோல்மால்’ என்ற புதிய திரைப்படத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் சிவா இணைந்து நடிக்கவுள்ளனர். இயக்குநர்கள் கே பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்பு கன்னடத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ள பொன்குமரன் இந்த தமிழ் திரைப்படத்தை இயக்குகிறார்.

0a1a

இப்படத்துக்கான படபூஜை இன்று சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. ஜீவா, சிவா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, நடிகர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இப்படம் குறித்து இதன் இயக்குனர் பொன்குமரன் கூறுகையில், “முழுநீள நகைச்சுவையுடன் கூடிய குடும்ப பொழுதுபோக்கு படமாக கோல்மால் இருக்கும், இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும், ரசிகர்களை அவர்களது குடும்பத்துடன் திரையரங்கிற்கு வரவழைக்கும்,” என்று  தெரிவித்தார்.

”ஜீவாவும் சிவாவும் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். அவர்கள் கூட்டணி அமைக்கும் பொழுது அது இன்னும் சிறப்பாக இருக்கும்.  பாயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஹோப் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முரளி சர்மா, யோகி பாபு, சோனியா அகர்வால், மனோபாலா, கருணாகரன், ரமேஷ் கண்ணா, நரேன், ஜார்ஜ் மரியான், சஞ்சனா சிங், மொட்டை ராஜேந்திரன், பஞ்சு சுப்பு, சாது கோகிலா, விபின் சித்தார்த் மற்றும் கே எஸ் ஜி வெங்கடேஷ் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

அதிக பொருட்செலவில் மொரிஷியஸில் ‘கோல்மால்’ முழு படமும் படமாக்கப்படும் என்று பொன்குமரன் மேலும் கூறினார். “இந்த படத்தை தயாரிப்பதற்கு வினோத் ஜெயின் மிக்க மகிழ்ச்சியுடன் முன்வந்துள்ளார்” என்று இயக்குநர் கூறினார்.

நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி டிசம்பர் மாதம் நிறைவடையும்;  2022-ம் ஆண்டின் முதல் பாதியில் படம் வெளியிடப்படும், என்று அவர் தெரிவித்தார்.

அருள் தேவ் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை எஸ் சரவணன் கையாளவுள்ளார். படத்தொகுப்பை டான் போஸ்கோவும், கலை இயக்கத்தை சிவாவும் மேற்கொள்ள, கவிஞர்கள் மதன் கார்க்கி மற்றும் விவேகா பாடல்களை இயற்றவுள்ளனர்.

எம் நரேஷ் ஜெயின் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆவார். எம் செந்தில் நிர்வாக தயாரிப்பு பணிகளை மேற்கொள்வார். டூனி வடிவமைப்பு பணிகளை செய்வார். படத்தின் மக்கள் தொடர்பை நிகில் முருகன் கவனிப்பார்.

தயாரிப்பு: ஜாகுவார் ஸ்டுடியோஸ் வினோத் ஜெயின்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: பொன்குமரன்

Read previous post:
0a1a
கவிஞர் பிறைசூடன் காலமானார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் நேற்று (08-10-2021) காலமானார். அவருக்கு வயது 65. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 6

Close