“நமக்கு வெங்காய எரிச்சல் – தி.மு.க.! செருப்படி – அ.தி.மு.க.!!”

ஒரு மன்னன் தன் குடிமகன் ஒருவனை அழைத்து “உனக்கு ஒரு தண்டனை. அங்கே தட்டிலிருக்கும் 100 வெங்காயத்தை தின்ன வேண்டும்; அல்லது செருப்பால் 100 அடி வாங்கிக்கொள்ள வேண்டும்” என்றான்.

அந்த மனிதன், செருப்படி வாங்கினால் கேவலம் என்று எண்ணி, வெங்காயம் தின்பதாக ஒத்துக்கொண்டான்.

அதன்படி வெங்காயம் தின்னத் தொடங்கினான். 30-35 வெங்காயம் தின்றவனால் அதற்குமேல் தின்ன முடியவில்லை. எனவே அவன், “மன்னா, என்னால் வெங்காயம் தின்ன முடியவில்லை. எனவே நான் செருப்படியே வாங்கிக் கொள்கிறேன்” என்றான்.

அதன்படி செருப்பால் அடி வாங்க தொடங்கினான். 40-50 செருப்படி வாங்கியவன் வலி தாங்க முடியாமல் அலறியடி, “என்னால் செருப்படி வாங்க முடியவில்லை. எனவே வெங்காயமே தின்னுகிறேன்” என்று கூறினான்.

மீண்டும் சில வெங்காயம் தின்றவனால் அதற்குமேல் முடியவில்லை. எனவே செருப்படி வாங்க தொடங்கினான்.

வலி தாங்க முடியவில்லை. மீண்டும் வெங்காயம், எரிச்சல் தாங்க முடியவில்லை, மீண்டும் செருப்படி என மாற்றி மாற்றி வாங்கிக்கொண்டிருந்தான்.

அவன் யாரென்று தெரியுமா?

முகம் காட்டும் கண்ணாடியை பாருங்கள்..!!!

“வேறு வழியே கிடையாது” என அறிவிலிபோல், சிந்திக்க தெரியாமல், 5 ஆண்டு தி.மு.க, எரிச்சல் தாங்க முடியாமல் 5 ஆண்டு அ.தி.மு.க, வலி தாங்க முடியாமல் மீண்டும் தி.மு.க என இருவரிடமும் வாங்கிக் கொண்டிருப்பது யார்..?

நாம் தானே..?

(தனக்கு வந்த இந்த பதிவை பார்வேர்டு செய்திருப்பவர்

அலெக்ஸ் பால் மேனன் ஐ.ஏ.எஸ், மாவட்ட ஆட்சியர், சத்தீஷ்கர் மாநிலம்.)

Read previous post:
0d
“My name is Umar Khalid and I am not a terrorist” – Video

As the five JNU students, including Umar Khalid, who the police had been looking for in connection with a sedition

Close