‘விஸ்வரூபம் 2’ படத்தின் ட்ரெய்லர் 11ஆம் தேதி வெளியாகிறது!

கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ட்ரெய்லர் வருகிற 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி ட்ரெய்லரை அமீர்கானும், தமிழ் ட்ரெய்லரை ஸ்ருதிஹாசனும், தெலுங்கு ட்ரெய்லரை ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிடுகிறார்கள்.

இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவன், அமெரிக்காவுக்கு ஆதரவாக, இந்தியாவுக்கு சம்பந்தமே இல்லாத ஆப்கானிஸ்தான் பிரச்சனைக்குள் மூக்கை நுழைப்பதாக கதை பின்னப்பட்டு, உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட்ட படம் ‘விஸ்வரூபம்’. இதன் இரண்டாம் பாகம் தான் ‘விஸ்வரூபம் 2’. இதை கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ளார். அவருடன் ராகுல் போஸ், பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ரவிச்சந்திரனின் ஆஸ்கர் ஃபிலிம்ஸ், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்டு மாதம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

Read previous post:
0a1c
‘காலா’ படத்துக்கு வசனம் எழுதிய தாராவி இளைஞர்!

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், த்னுஷ் தயாரிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘காலா’ திரைப்படம்  பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்களைப் பெற்றுவருகிறது. குறிப்பாக, படத்தின் வசனங்கள் மிகப் பெரிய

Close