“தமிழக மீனவர்களை பலி கொடுத்து இலங்கையை திருப்திப்படுத்த இந்திய அரசு நினைக்கிறது!”

“தமிழக மீனவர்களை பலி கொடுத்து இலங்கை அரசை திருப்திப்படுத்த இந்திய அரசு நினைக்கிறது. இந்திய அரசின் இந்த போக்கிற்கு எதிராக தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்களும் மாணவர்களும் திரண்டெழுந்து போராட முன்வர வேண்டும்” என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ராமேசுவரம் அருகில் உள்ள தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, இந்திய எல்லைக்குள்ளாகவே அவர்களை இலங்கை கடற்படை சுட்டதின் விளைவாக ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

கடந்த 30 ஆண்டு காலத்திற்கு மேலாகத் தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை வேட்டையாடி வருகிறது. 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமான படகுகளும் வலைகளும் நாசப்படுத்தப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்பட்டு சித்ரவதைகளுக்குள்ளாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் கொடுமைகளுக்குள்ளாக்கப்படும் நிகழ்ச்சி தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இந்திய குடிமக்களான தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டிய இந்தியக் கடற்படையும், கடலோரக் காவல் படையும் வேடிக்கை பார்க்கின்றன.

தமிழக மீனவர்களைப் பலி கொடுத்து இலங்கை அரசைத் திருப்திப்படுத்த இந்திய அரசு நினைக்கிறது. இந்திய அரசின் இந்தப் போக்கிற்கு எதிராக தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்களும் மாணவர்களும் திரண்டெழுந்து போராட முன்வருமாறு வேண்டிக்கொள்கிறேன்” என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

 

Read previous post:
0
“சிங்கள கடற்படையினர் மீது இந்தியா கொலை வழக்கு தொடுக்க வேண்டும்!”

“தமிழக மீனவ இளைஞனை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குத் தொடுக்க வேண்டும். அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நிர்பந்திக்க வேண்டும். அதற்கு

Close