கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன்!

பிரபல இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் கேங்ஸ்டரை மையமாக கொண்ட  புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் வித்தியாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வித்யுத் ஜமால் நாயகனாக நடிக்கிறார். பீரியட் ஃபிலிமாக உருவாகிவரும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

பொதுவாக இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கரின் படத்தில் நடிக்கும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும் அவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்களும் அமைந்திருக்கும். “இப்படத்தில் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார் இயக்குனர்.

 இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இரண்டாம்  கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க உள்ளது இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

.