தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’ காட்சிகளை பார்த்து அசந்துபோன செல்வராகவன்!

ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார் தனுஷ். அவரது சொந்த நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துவரும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இது ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் பற்றிய கதை. இதில் ராஜ்கிரணின் சிறுவயது பாத்திரத்தில் தோன்றவிருக்கிறார் தனுஷ். இயக்குனர் கெளதம் மேனனும் கெளரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவருடைய காட்சிகளை சென்னையில் காட்சிப்படுத்தி இருக்கிறார் தனுஷ். தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தேனியில் நடத்தி வருகிறது படக்குழு.

இப்படத்துக்காக சென்னையில் படமாக்கப்பட்ட காட்சிகளை எடிட்டிங் முடித்து, தன் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவனுக்கு தனுஷ் திரையிட்டு காட்டியிருக்கிறார்.

“பவர் பாண்டி’ காட்சிகளைப் பார்த்து அசந்து போய்விட்டேன். ரொம்ப வேடிக்கையாகவும், மாயாஜாலமாகவும், நெகிழ்வூட்டும் விதத்திலும் இருந்தன. தனுஷ் மற்றும் ராஜ்கிரண் இருவரையும் பற்றிப் பெருமைப்படுகிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

இதற்கு தனுஷ், “ரொம்ப நன்றி செல்வா. ரொம்ப சந்தோஷமாகவும் சிலிர்ப்பாகவும் இருக்கிறது. எல்லாப் புகழும் உங்களுக்கே” என்று தெரிவித்துள்ளார்.

Read previous post:
r11
விஜய்சேதுபதியின் ‘றெக்க’ – முன்னோட்டம்

‘தர்மதுரை’ வெற்றிப்படத்தை அடுத்து விஜய்சேதுபதி நடிப்பில் உலகெங்கும் வெளியாகும் படம் ‘றெக்க’. வருகிற 7ஆம் தேதி தமிழகத்தில் மட்டும் 300க்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் ‘றெக்க’யில் விஜய்சேதுபதிக்கு

Close