சமஸ்கிருதர்கள் எதிர்ப்பு எதிரொலி: விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ டீஸர் வாபஸ்!

‘சைத்தான்’ படத்தின் டீஸரில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் சமஸ்கிருத மந்திரத்தை ஒட்டி இருப்பதாக தமிழ்நாடு வாழ் சமஸ்கிருதர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த டீஸரை வாபஸ் பெற்றுள்ளார், அப்படத்தின் கதாநாயகனும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சைத்தான்’. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கிறார்.

படப்பிடிப்புப் பணிகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் தீபாவளி அன்று திரைக்கு வரவிருக்கிறது. இதன் டீஸர் சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டது.

டீஸரில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள், சமஸ்கிருத மந்திரத்தை ஒட்டியிருப்பதாக தமிழ்நாடு வாழ் சமஸ்கிருதர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இப்படத்துக்கு எதிராக கருத்தும் தெரிவித்து வந்தார்கள். இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டுவதற்காக, இணையத்திலிருந்து அந்த டீஸரை வாபஸ் பெற்றுள்ளார்.

இது குறித்து விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சைத்தான்’ படத்தின் டீஸர் வீடியோவின் இசையில் ஒலிக்கும் மறைந்த பாடலாசிரியர் அண்ணாமலையின் வரிகள், சமஸ்கிருத மந்திரம் ஒன்றின் சாயலை ஒட்டி இருப்பதால், சிலர் மனவருத்தத்துக்கு உள்ளானதை நான் அறிந்தேன். அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க அந்த வரிகளை உடனடியாக மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளேன். எனது Youtube, Facebook மற்றும் Twitter பக்கங்களில் இன்று நீங்கள் ‘சைத்தான்’ படத்தின் டீஸரை காண முடியாது. புதிய வரிகளுடன் பாடல் பதிவு செய்து, நாளை புதிய டீஸரை வெளியிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அது சரி… தமிழ்நாட்டில் சமஸ்கிருதர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? இருக்கா…! நன்னா உத்துப் பாத்தேள்னா தெரியும்…! இருக்கா…! “நாங்களும் டமிள்ஸ் தான்; பெரியார் தான் எங்களை தப்பா புரிஞ்சுண்டார்”னு சொல்லிண்டு இருப்பா…! தேடி பாருங்கோ…!

Read previous post:
0a
தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’ காட்சிகளை பார்த்து அசந்துபோன செல்வராகவன்!

ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி வரும் 'பவர் பாண்டி' படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார் தனுஷ். அவரது சொந்த நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துவரும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன்

Close