“சமாதியவே இந்த அடி அடிக்குதே… உயிரோட இருந்தபோது என்னா அடி அடிச்சிருக்கும்…!”

சரணடையப் புறப்பட்டார் சசிகலா.

கூடச் செல்கிறது மிடாஸ்.

தொட்டதையெல்லம்
பொன்னாக்கிக் கொடுக்க
போயஸ் கார்டன் வரவில்லை.

ராணியோடு
இளவரசியும் பயணிக்கிறார்.

தன் குடும்பத்துக்கு
சம்பாதித்ததற்காக இதை
சரித்திரம் பதிவு செய்கிறது.

ஹாசினி வாசலில் கூடாத கூட்டம்
ஹாசினிக்காய் இன்னும் பேசாத கூட்டம்
வண்டியின் பின்னால்
ஓடிக் களைத்து
நினைவிடம் சேர்ந்து வாழ்த்தொலி எழுப்பி
சாகச சத்தியம் செய்து கிளம்பும்
சசிகலா பின்னால் நிற்பது காணீர்.

சரணடையப் புறப்பட்டார் சசிகலா

போகும் முன்
உள்ளே தூங்கும் “ஜெ”யின் மேல்
ஓங்கி அடித்துவிட்டுத்தான் போகிறார்
கோவத்தோடு.

அகத்தியன், திரைப்பட இயக்குனர்

# # #

சமாதியவே இந்த அடி அடிக்குதே….

உயிரோட இருந்தபோது

என்னா அடி அடிச்சுருக்கும்….

“உன்னால தான் (டீ) எல்லாம்”னு சொல்ற மாதிரியே இருக்கு…! “உன்னைய அழிச்ச மாதிரியே எல்லாரையும் அழிப்பேன்”னு சொல்ற மாதிரி இருக்குல்ல…

RAJKUMAR RAJENDRAN

# # #

அடித்து அடித்து சிவந்த கரங்கள்
துடைத்து கொண்டார்
கடைசியாக ஒரு அடி அடித்து…!

SHIVAKKUMAR TD

# # #

இதுவே பேய்ப்படமா இருந்திருந்தா…

தரைலருந்து ஒரு கை வெளிய வந்து

கழுத்தை நெரிச்சிருக்கும்…

ஹ்ம்…

சஹாரா

# # #