சனியை ஆரத்தி எடுத்து நடுவீட்ல உக்கார வச்ச ஓபிஎஸ்!

என்ன பன்னீர் செல்வம், நீ திருந்தவே மாட்டியா? அன்றைக்கு பதவிய காப்பாற்ற அம்மா, சின்னாத்தா கால்ல விழுந்த. நேற்று சின்ன மருமக கால்ல விழுந்த. இன்றைக்கு எம்எல்ஏக்கள் கால்ல விழுவ. நாளைக்கு பேரன் பேத்தி கால்லயும் விழுவியா? உன்னோட கூன்பாண்டி முதுகு நிமிரவே செய்யாதா?

தமிழ்நாட்டை ஆண்மையுடன் ஆள்வாய்ன்னு தானே இளைஞர்கள் உனக்காக ஓங்கி குரல் கொடுத்தாங்க. உனக்கு தமிழ்நாடு எப்படி போனாலும் உன் பதவி முக்கியம், அப்படித் தானே?

நேற்று தலைக்கனத்தை களைந்து பேச வேண்டியவங்க கிட்ட பேசுன்னு பதிவு போட்டேன். அது தீபாகிட்ட இல்ல. நீ மக்கள் கிட்ட என்ன செய்யணும்னு கேட்பாய்ன்னு நினைத்தேன். நீ சின்ன மருமக கால்ல விழப்போற. என்ன, தமிழ்நாடு உன்னோட கிள்ளுக்கீரையா?

எங்களோட தமிழ்நாட்டை யார் ஆளணும்னு நாங்க முடிவு பண்ட்றோம். நல்ல பிள்ளையா. தமிழ்நாட்ல தேர்தல் நடததச் சொல்லி ஜனாதிபதிக்கு கடிதம் எழுது. மக்கள் முடிவு பண்ணட்டும்.

நாங்க ஓட்டு போட்டது அம்மாக்கு. வேற யாருக்கும் கிடையாது. நல்ல பிள்ளையா மக்கள் கிட்ட நான் என்ன செய்யணும்னு ஒரு வார்த்தை கேட்டிருந்தா தமிழ்நாட்டோட நிரந்தர முதல்வரா இருந்திருப்ப. இப்ப மக்கள் உன்னைய காரித் துப்புறாங்க. சனி போகலை, இடம் மாறி உக்காந்துட்டு ஜம்முன்னு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டும்.

இவ்ளோ நாளும் தமிழ்நாட்டோட எந்த துன்பத்துக்கும் குரல் கொடுக்காதவ, தன்னோட அத்தையோட மரணத்துக்கு கூட ஓங்கி குரல் கொடுக்காத பொண்ணு, இனி எப்படி எங்களுக்காக குரல் கொடுப்பா? நீ சனியை ஆரத்தி எடுத்து நடுவீட்ல உக்கார வச்ச. அது என்ன ஆட்டம் ஆடப் போவுதுன்னு பொறுமையா பாரு.

என்ன இவ இவ்ளோ திமிரா, பேசுறா யார் இவன்னு யோசிக்கிறியா? அம்மா சமாதி முன்னாடி உக்காந்து 40 நிமிசம் தியானம்னு நாடகம் போட்டியே அந்த தியான சக்தி உன்கிட்ட உண்மையா இருந்தா ரெண்டு நிமிசம் உன்னோட குலதெய்வம் முன்னாடி உக்காரு தெரிவேன்.

தேடி வருவன்னு நெனச்சேன் நீ ஓடிப்போற. பரவால்ல.

இந்த நாட்ல பிறந்தவங்க ஒவ்வொருத்தரும் என்னோட பிள்ளைங்க. அவங்களுக்கு ஒரு துன்பம் வந்தா என்னோட குரல் நிச்சயமா ஒலிக்கும். கவனமா நடந்துக்கோ இனி தமிழகத்துக்கு என்ன துன்பம் வந்தாலும் சசிகலாவோட நிலமை தான்.

உண்மை உறங்கும், சாகாது.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். நல்லதை செய். நல்லதை யோசி. நல்லபடியாக வாழு.

இந்தாம்மா, உன் புருஷனுக்கு சோத்துல ஒரு பிடி உப்பை அதிகமா அள்ளிப்போடு!

SAHANA DHAS