பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிக்கும் ரஜினி படம்: டிசம்பரில் படப்பிடிப்பு ஆரம்பம்?

ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்து வருகிறது. பா.ரஞ்சித் இயக்கிய இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார்.

பா.ரஞ்சித் அடுத்து வேறு சில முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் தரப்பில் ‘ரஞ்சித் கதை எழுதுகிறார். எந்த ஹீரோவுக்கும் கதை சொல்லவில்லை’ என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

ரஜினி தற்போது லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கும் ‘2.0’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் பெருமளவுக்கு படமாக்கப்பட்டுவிட்டன.

எனவே, தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை, வருகிற டிசம்பர் மாதம் ரஜினியின் பிறந்த நாளையொட்டி ஆரம்பிக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0a1a