ரஜினிகாந்த் நடிக்கும் 2 படங்களை தயாரிக்கிறது லைகா நிறுவனம்

ரஜினிகாந்த் நடிக்கும் 2 திரைப்படங்களை லைகா நிறுவனம் தயாரிக்கிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

’ஜெயிலர்’ படம் முடிந்த பிறகு லைகா தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்..அதில் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது .

இத்தகவலை லைகா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தமிழ் குமரன் தெரிவித்தார்.