ரஜினியை சந்தித்தார் தாய்லாந்து இளவரசி ராஜதர்ஸ்ரீ ஜெயம்குரா!

தாய்லாந்து நாட்டு அரசகுடும்பத்து இளவரசியும், அந்நாட்டு பிரதமருமான ராஜதர்ஸ்ரீ ஜெயம்குரா சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார்.

“கபாலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடந்தபோது, அப்படப்பிடிப்பு சிறப்பாக நடைபெறுவதற்கு மிகப் பெரிய அளவில் உதவி புரிந்தவர் ராஜதர்ஸ்ரீ ஜெயம்குரா.

அப்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக அவர் ரஜினிகாந்தை சந்திப்பதற்காகவே தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பின்போது அவர், ரஜினிக்கு தாய்லாந்தில் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் இருப்பதாகவும், அவர் அங்கு பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளதாகவும் கூறினார்.

“வி கிரியேஷன்ஸ்“ தலைமை செயலதிகாரி பரந்தாமன் தாணு இச்சந்திப்பின்போது உடனிருந்தார்.

Read previous post:
0a
“நல்லகண்ணுவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக அழுகிறார்கள்” என்போர் கவனத்துக்கு!

“we are with you…” என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நான் எழுதியிருந்த நிலைத் தகவலைப் படித்துவிட்டு, இன்பாக்ஸிலும் ஃபோனிலும் வந்து பொருமுகிறார்கள். “நல்லகண்ணு ஐயாவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக

Close