கருத்து கணிப்பு: பஞ்சாப் தேர்தலில் ஆரிய பயங்கரவாத கட்சிக்கு மரண அடி விழும்!

நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப் பேரவை தேர்தலில், ஆரிய பயங்கரவாத கட்சியான பாஜகவுக்கு மரண அடி விழும் என தேர்தலுக்கு பிந்தைய சகல கருத்துக் கணிப்புகளும் தெரிவித்துள்ளன.

(தமிழ் நிலம், வளம், மக்கள் நலனுக்காக போராடும் தமிழர்களை “தேச விரோதிகள்”, “சமூக விரோதிகள்”, “பயங்கரவாதிகள்”, “பொறுக்கிகள்” என பாஜகவினர் அவதூறு செய்து வருகிறார்கள். எனில், “இந்தியாவின் பூர்விக குடிகள் ஆரியர்கள். சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம். ஆரிய மொழியான சம்ஸ்கிருதத்தை அகில இந்திய மொழியாக பரப்ப வேண்டும்” என்ற தவறான ஆரிய கோட்பாடுகளுடன் அராஜகம் செய்யும் பாஜகவினரை “ஆரிய பயங்கரவாதிகள்” என்றும், அவர்களுடைய கட்சியை “ஆரிய பயங்கரவாத கட்சி” என்றும் குறிப்பிடுவது பொருத்தமானது தானே!)

பாஜக ஆதரவுடன் அகாலிதளம் கட்சி பஞ்சாபில் ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆளும் கூட்டணியை பஞ்சாப் வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்திருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இங்கு ஆட்சி அமைக்கப்போவது அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியா, அல்லது காங்கிரசா என்பதில் தான் இந்த கருத்து கணிப்புகளில் வேறுபாடு இருக்கிறதே தவிர, மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் பாஜக – அகாலிதளம் கூட்டணி 4 – 15 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என்பதில் வேறுபாடு இல்லை.

அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லிக்கு பின் முதன்முறையாக மற்றொரு மாநிலமாக பஞ்சாபில் கால் ஊன்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் விவரம்:

0a