“என் கேள்விக்கு ஓவியா சொன்ன பதில் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது!”

நான் இன்னும் பிக்பாஸ் பார்க்கல. ஆனா, பேஸ்புக்க தொறந்தா இந்த புள்ள ஹெலனை (ஓவியாவை) பத்தி தான் எப்பப் பாத்தாலும் பதிவு வருகிறது…

நாமளும் நம்ம பங்கிற்கு ஓவியா பற்றிய பதிவு ஒண்ணு போட்டுருவோம்…

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு போட்டோ எடுக்க சென்றிருந்தேன்..அங்கு ஓவியாவும் அவர் அம்மாவும் வந்திருந்தார்கள். வழக்கம் போல சிரித்த முகத்தோடு அவரும், அவர் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள் என்னோடு.

“என்ன, எங்க போனாலும் அம்மா கூடவே போறீங்களே… ஏன்?” என்ற என் கேள்விக்கு, ஓவியா தயக்கமின்றி சொன்ன பதில் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது…

“இன்னும் கொஞ்ச காலத்தில் என் அம்மா செத்துருவாங்க அவங்களுக்கு கேன்சர். கடைசி கட்டத்துக்கு வந்துட்டாங்க. இருக்கிற வரைக்கும் மகிழ்ச்சியாக இருக்கட்டுமே என்று தான் நான் போகும் இடங்களுக்கெல்லாம் கூட்டிட்டுபோறேன்” என்றார் புன்னகையோடு…

அதிர்ச்சியான நான், “எப்படி இப்படி சிரிச்சுக்கிட்டே இருக்கீங்க?” என்று கேட்க,

“என்ன பண்ண சொல்றீங்க…? என்ன தான் பண்ண முடியும்…? ஸோ, என்ஜாய்” என்று அவர் அம்மாவின் தோள்மீது கைப்போட்டுக் கொண்டார்.

சின்ன வயதில் பெரும் சோகத்தை தாங்கிக் கொண்டவருக்கு இந்த பிக்பாஸ் விளையாட்டெல்லாம் ஜுஜூபி.

நீங்க ஜெயிச்சு வாங்க ஓவியா…!

GUNA SEELAN

Photographer

 

Read previous post:
0
Nibunan – Moviebuff Sneak Peek

Nibunan - Moviebuff Sneak Peek A daring Deputy Superintendent of Police and his two charismatic subordinates are set to hunt

Close