உண்மையை மறைத்து தொடர்ந்து ஓவியா மீது பழி போடுகிறார் காயத்ரி: இதோ ஆதாரம்!

பிக்பாஸ்.

நடந்த குழப்பத்துல இந்த காயத்ரி, நமீதால்லாம் முழு பூசணிக்காயை சோத்துல போட்டு மறச்சுருக்குதுங்க. நாமளும் மிஸ் பண்ணிட்டோம்.

இந்த ஜுலி – ஓவியா மேட்டர்ல மெயின் சீனே என்ன? டைனிங் டேபிள்ல நமீதா, “ட்ராமா, ஆக்டிங், 3 மாசம் எப்படி இருக்கனு பாத்துடறேன்”னு ஓவியாவப் பாத்து சொன்னதாகவும், அதை ஜூலி தன்னை சொன்னதா நெனச்சுக்கிட்டு அழுததாகவும், ஓவியா ‘அது என்னை சொன்னது’னு சொல்லாம, ஜுலிய சொன்ன மாதிரியே சமாதானப்படுத்தி ‘ட்ரிகர்’ பண்ணதாவும், அதனாலதான் எல்லா பிரச்சினையும் வந்ததுன்றதும் தானே?

இப்ப மறைக்கப்பட்ட பூசணிக்காய் என்ன தெரியுமா? டைனிங் டேபிள்ல நமீதா கழுவி ஊத்துனது ஓவியாவ இல்ல; ஜுலிய தான். டவுட்னா ‘தமிழ் தலைவாஸ்’ வந்த எபிசோட ஹாட்ஸ்டார்ல போட்டுப் பாருங்க. இப்ப தான் பாத்தேன்.

கபடி டீம் முன்னாடி ஜூலிய “லெட்டர படிக்க வேணாம்”னு நமீதா சொன்னாங்க. அதுக்கு கோச்சுட்டு தான் ஜூலி வெளிய உக்காந்துருக்கானு நெனச்சுட்டு, ஜூலிய தான் ட்ராமா பண்றானு திட்டிட்டு இருந்தாங்க. இது அந்த டேபிள்ல இருந்த காயத்ரிக்கும் ஓவியாக்கும் கண்டிப்பா தெரியும்.

ஆனா, காயத்ரி அப்படியே ப்ளேட்ட திருப்பிப் போட்டு இப்ப வரைக்கும் அத வச்சுதான் எடிட்டிங்ல பிரச்சினை, கேமிரால பிரச்சனைனு ப்ளே பண்ணிட்டு இருக்கு. அது காயு பிஹேவியர். ஆனா, ஓவியா இப்பவரைக்கும் அத வெளிய சொல்லல. அதான் “சேரி பிஹேவியர்”(!)

ஓவியாவுக்கு விழுற ஒவ்வொரு ஓட்டும் சும்மா இல்ல…!

 JEYACHANDRA HASHMI

 

Read previous post:
0
பிக்பாஸ்: கன்ஃபெஷன் அறையில் கதறி அழுத ஓவியா!

பிக்பாஸ் வீட்டில் உள்ள கன்ஃபெஷன் அறைக்கு இன்று ஓவியாவும், ஜூலியும் தனித்தனியாக அழைக்கப்பட்டு, பிக்பாஸ் வீட்டில் கிடைத்த அனுபவம் குறித்து கேட்கப்பட்டது.. முதலில் ஓவியா கூறுகையில், “இந்த

Close