பிக்பாஸ்: கன்ஃபெஷன் அறையில் கதறி அழுத ஓவியா!

பிக்பாஸ் வீட்டில் உள்ள கன்ஃபெஷன் அறைக்கு இன்று ஓவியாவும், ஜூலியும் தனித்தனியாக அழைக்கப்பட்டு, பிக்பாஸ் வீட்டில் கிடைத்த அனுபவம் குறித்து கேட்கப்பட்டது..

முதலில் ஓவியா கூறுகையில், “இந்த வீட்டில் எனக்கு உண்மையாக மனம் விட்டு பேச ஆளில்லை, ஆனால் இதையும் ஒரு அனுபவமாக எண்ணி நான் தாங்கி கொள்வேன்’ என்று கூறினார். அதற்கு மேல் பேச முடியாமல் அவரது கண்களில் கண்ணீர் கொட்டியது.

பின்னர், “எப்பவும் ஜாலியான பாட்டு போடுங்க. சோகமான பாட்டு போடாதீங்க. என்னால் தாங்க முடியாது. I am not that much strong” என்ற ஓவியா மீண்டும் கண் கலங்கினார்.

அதன் பின்னர் பேச வந்த ஜூலி, ‘நான் ஒரு சில காரணங்களால் பொய் சொல்லியிருக்கலாம், ஆனால் அந்த பொய், வேண்டுமென்றே சொன்ன பொய் கிடையாது. நான் பொய் சொல்பவளும் கிடையாது’ என்றார்..

இந்த வாரம் யாரும் எலிமினேட் செய்யப்பட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு அது தெரிவிக்கப்படாததால், எலிமினேஷனுக்கு ஏற்கனவே நாமினேட் செய்யப்பட்ட ரைசாவோடு, ஓவியா, ஜூலி, ஆரவ் ஆகியோரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்..

 

Read previous post:
0a1
பிக்பாஸ்: ஓவியா தாமாக முன்வந்து ஜூலியை பேச அழைப்பது நெகிழ்ச்சி!

பிக்பாஸ்: 24.07.2017 * விருமாண்டி திரைப்படம் எடுத்த கமலே இந்நேரம் மிரண்டு போயிருப்பார். அந்தளவிற்கு அந்த 5 விநாடி மேட்டரை ஆளாளுக்கு போட்டு மிக்ஸியில் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Close