லவ் யூ லியானர்டோ…!

லியோனார்டோ டிகேப்ரியோ The Revenant படத்திற்குப் பிறகுதான் சுற்றுச்சூழல் சீர்கேட்டையும், உலக வெப்பமயமாதலையும் குறித்து பேசுவதாக பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ‘Leonardo DiCaprio Foundation’ எனும் அமைப்பை 1998-ல் துவக்கி, 65 நிறுவனங்களின் ஒத்துழைப்போடு, 30 மில்லியன் டாலர்களை ஒதுக்கி, இயற்கையை பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் டிகேப்ரியோ. தொடர்ந்து இயற்கையின் சீரழிவைக் குறித்தும், அதை தடுப்பது குறித்தும் பல மேடைகளில் பேசி வருகிறார்.

அவருக்கு ஆதரவான குரலாகவும், செயல்படும் நபராகவும் நாம் இருப்போம்.

நன்றி.

முழுதும் அறிய,
leonardodicaprio.org

– சக்ரவர்த்தி பாரதி

                                           # # #

ஈழப்போர் உச்சத்திலிருந்தபோதுதான் அன்பு ரகுமானும் ஆஸ்கர் வென்றார்.

விருது பெறும் உன்னதமான அந்த தருணத்தின்போது, ஈழத்தில் நாதியற்ற தமிழினம் அழிக்கப்படுவது பற்றி ஒரு வார்த்தை சொல்லிவிட மாட்டாரா.. உலக மக்களின் கவனத்தை ஈழத்தின் பக்கம் திருப்பிவிடாதா அந்த வார்த்தைகள்.. என்று ரொம்பவே காத்திருந்தோம்.. இதை குற்றச்சாட்டாகவோ குறையாகவோ சொல்லவில்லை… அப்போது தோன்றிய ஒரு பெரும் ஏக்கம் அது..

“உலகில் பெரும் மாசுபாட்டை ஏற்படுத்துபவர்களுக்காகவும், கார்ப்பரேட்களுக்காகவும் பேசும் தலைவர்களை ஆதரிக்காமல் மனித இனத்துக்காக, உலகின் பூர்வகுடிகளுக்காக, காலநிலை மாற்றத்தால் நேரடியாக பாதிக்கப்படும் கோடிக்கணக்கான பின்தங்கிய மக்களுக்காக, நமது குழந்தைகளின் குழந்தைகளுக்காக, அரசியலாலும் பேராசையாலும் நசுக்கப்படும் குரல்களுக்காக பேசும் தலைவர்களை நாம் ஆதரிக்க வேண்டும்.” – லியானர்டோ டி காப்ரியோ

இன்று லியானர்டோ டி காப்ரியோ ஆஸ்கர் விருது வென்றபின் பேசிய இந்த வரிகளை ஏனோ மீண்டும் மீண்டும் படித்து பார்க்கிறேன்..

லவ் யூ லியானர்டோ…!

– பாலா.ஜி

0a20