சசிகலாவுடன் முதல்வர் ஓ.பி.எஸ். சந்திப்பு: பதவி விலகுவது பற்றி ஆலோசனை?

சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் கோரி வரும் நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து சசிகலாவுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எப்போது ஓ.பி.எஸ். பதவி விலகுவது, சசிகலா எப்போது முதல்வராக பதவி ஏற்பது என்பன குறித்து இந்த சந்திப்பில் முடிவு செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

இதனிடையே, போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று மாலை ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சசிகலா திறந்து வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.பிக்கள், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.