“பெரியாரை அப்புறப்படுத்த நினைப்போரை காலம் அப்புறப்படுத்தி விடும்!”

“பெரியார் ஒரு கட்சியின் தலைவரல்லர்; ஓர் இனத்தின் தலைவர்; ஒரு காலத்தின் தலைவர். ஒரு வரலாற்று நாயகர். பெரியார் தோன்றியிருக்கவில்லையெனில் ஓர் இனத்தின் அடிமை வரலாறே முற்றுப் பெற்றிருக்காது; நாட்டின் மேல் போர்த்திக் கிடந்த இருள் விலகியிருக்காது; தமிழனின் தலை எழுத்தே மாற்றப் பெற்றிருக்காது. ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுக்கால வரலாற்றை மாற்றியமைத்த வரலாறு பெரியாருக்குஉண்டு.”

பாவலரேறு பெருஞ்சித்திரனார் (தென்மொழி,சுவடி:9,ஓலை:3-4, 1971)

பெரியார் வாழ்ந்த காலத்திலேயே பெருஞ்சித்திரனார் எழுதிய மதிப்பீடு இது!

பெரியாரின் முகத்திற்கு நேரே ‘உங்கள் மொழிக்கொள்கை எமக்கு உடன்பாடில்லை’ எனக் கூறும் வழக்கம் உடையவர் தமிழ்மறவர் வை.பொன்னம்பலனார். தமிழ்மறவரின் மாணவர்களே வே.ஆனைமுத்து, சிலம்பொலி செல்லப்பனார், பெருஞ்சித்திரனார், பொற்கோ முதலியோர்.

முரண்பாடான எந்தக் கருத்தையும் திறந்த மனத்தோடு கேட்கும் வழக்கமுடையவர் பெரியார்!

வரலாறும் தெரியாமல், வரலாற்று மாந்தர்களை மதிப்பிடவும் தெரியாமல், பெரியாரைச் சிறுமைப்படுத்தச் சிலர் புறப்பட்டுள்ளனர்!

பெரியாரைச் சிறுமைப்படுத்தி மகிழ்ச்சி காண்போரிடம் குமுகப் பொறுப்புணர்ச்சியை எதிர்பார்க்க இயலாது.

பெரியாரின் கருத்துகளோடு முரண்படுவதைப் பெரியாரே வரவேற்பார்.

அவரை அப்புறப்படுத்த நினைப்போரைக் காலம் அப்புறப்படுத்திவிடும்.

நன்றி: ஆறுமுகம் ஏ.பச்சையப்பன்

(சுயமரியாதைச்சுடர் பெரியாரின் 138வது பிறந்தநாள் இன்று 17.09.2016)