சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றம்: ஏ.கே.விஸ்வநாதன் நியமனம்!

சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த கரண் சின்ஹா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக  ஏ.கே.விஸ்வநாதன்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகர கமிஷனராக இருந்தவர் ஏ.கே.விஸ்வநாதன். ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழக ஏடிஜிபியாகவும் பதவி வகித்தவர். அதற்குப் பிறகு ஊர்க்காவல்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டவர் தற்போது சென்னை பெருநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர காவல் துணை ஆணையராக சாம்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த கரண் சின்ஹா சீருடை பணியாளர் தேர்வு வாரிய கூடுதல் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.